‘ஊரடங்கில் கூடுதல் தளர்வு’!.. இன்று முதல் 27 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் இன்று முதல் 27 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்து வருவதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஏசி வசதியின்றி 50 சதவீத இருக்கைகளுடன் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன.
்
மேலும் முக கவசம் அணிந்துவரும் பயணிகள், சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகளில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இன்று காலை 6 மணி முதல் பகல் மற்றும் இரவில் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. பயணிகள் டிக்கெட்டுகளை பெற கவுண்ட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
