ஓடும் பேருந்தில் வலிப்பு வந்து சுருண்ட டிரைவர்.. உறைந்த பயணிகள்.. திக்திக் நிமிடங்கள்.. சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காரைக்காலில் ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் டிரைவர் உள்பட 20 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.
![Private Bus driver collapses while driving 20 injured Private Bus driver collapses while driving 20 injured](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/private-bus-driver-collapses-while-driving-20-injured.jpeg)
புதுச்சேரி அம்பரகத்தூர் பகுதியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறது அந்த தனியார் பேருந்து. இந்தப் பேருந்தை ஐயப்பன் என்பவர் ஓட்டிச் சென்றிருக்கிறார். பேருந்தானது செல்லூர் எனும் பகுதிக்கு அருகே வந்தபோது டிரைவர் ஐயப்பனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதி இருக்கிறது.
மேலும், அருகில் இருந்த பூட்டிய கடை மீதும் இந்த தனியார் பேருந்து மோதி இருக்கிறது. இந்த விபத்தினால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்டிருக்கின்றனர். இவர்களை அருகில் உள்ள காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர் பொதுமக்கள்.
இந்நிலையில், இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர் காவல்துறையினர்.
இதனிடையே பேருந்திற்குள் இருந்த சிசிடிவி கேமராவில் உள்ளே நடந்தவை அனைத்தும் பதிவாகியிருக்கிறது. ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் பேருந்து விபத்திற்கு உள்ளான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
Also Read | பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி.. வீடியோ..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)