'24 மணி நேரமும் ஷிப்ட் போட்டு சவப்பெட்டி செய்றோம்...' 'சனி, ஞாயிறுல கூட லீவ் கிடையாது...' ஒரு நாளைக்கு எத்தனை பண்ணனும் தெரியுமா...? ஊழியர்கள் வேதனை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 12, 2020 11:29 AM

இதுவரை இல்லாத வகையில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 410 சவப்பெட்டிகளை தயாரித்து வருவதாக  கிழக்கு பிரான்சில் உள்ள ஓஜிஎஃப் என்னும் சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனதின் தலைவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

French coffin company reports 410 coffins being manufactured

சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸானது உலக நாடுகள் முழுவதும் பரவி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,780,657 பேர். ஆனால் இந்த கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை விழிபிதுங்கச் செய்கிறது. கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வைரசால் பாதிப்படைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சவப்பெட்டிகள் செய்யும் தொழிற்சாலைகள் இரவு பகல் பார்க்காமல் இயங்கிவருகிறது. ஐரோப்பாவில் மிகப்பெரிய சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமான ஓஜிஎஃப் நிறுவனம் கிழக்கு பிரான்சில் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தங்களது பணியை வேதனையுடன் செய்வதாக கூறுகின்றனர்.

பொதுவாக 15 வகைகளில் தயாரிக்கப்படும் சவப்பெட்டிகள், இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 4 மாடல்களில் மட்டுமே சவப்பெட்டியை உருவாக்குவதாக தொழிற்சாலை இயக்குநர் இமானுயெல் காரெட் தெரிவித்தார். மேலும் நாள்தோறும் சுமார் 410 சவப்பெட்டி தேவைப்படுவதாகவும், அதனால் சிலர் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வந்து பணியாற்றுகின்றனர் என கூறியுள்ளார். இந்த சூழல் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார் ஓஜிஎஃப் இயக்குனர் இமானுயெல் காரெட்.