‘ஊரடங்கு நீட்டிப்பு குறித்து’... ‘தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு’... தலைமை செயலாளர் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 11, 2020 09:16 PM

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி அறிவிப்பை ஏற்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.

Corona lockdown Extension based on Centre\'s decision

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் மோடி ஆலோசித்தார்.

அப்போது தமிழகம் உள்பட பல மாநில முதல்வர்களும், இன்னும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, ‘தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் முடிவை தமிழக அரசு அமல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

‘தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் டெஸ் கிட் கருவிகள் அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளில் முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும். கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.