"வரேனு சொன்னதும் அப்பாவுக்கு பேச்சே வரல!".. 250 இந்தியர்களுடன் யுகேவில் இருந்து பறந்த ஏர் இந்தியா விமானம்! இந்தியாவில் இருந்தும் தொடங்கிய சேவைகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து முடக்கங்கள் அறிவிக்கப்பட்டு மெல்ல மெல்ல சூழலுக்குத் தகுந்தாற்போல் தளர்த்தப்பட்டன.
இந்த நிலையில், லண்டன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுக்கு ஏர் இந்தியாவில் செல்வதற்கான முன்பதிவு மே 8, வியாழன் முதல் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக கொச்சியில் இருந்து அபுதாபிக்கும், டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கும், கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கும் மே 14 -ஆம் தேதி வரை விமான சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் முறையான கொரோனா பரிசோதனை விபரங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்திய மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் யுகேவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் பொது முடக்கத்துக்கு பிறகான முதல் விமானம் 250 பயணிகளுடன் வெற்றிகரமாக மும்பையை நோக்கி பறந்தது. இந்த விமானத்தில் பயணித்த முதலாம் ஆண்டு பிஸினஸ் படிப்பை பயிலும் மாணவர் ஒருவர் இதுபற்றி பேசும்போது, “நான் இந்த கொரோனா சூழலில் லண்டனில் சிக்கிக் கொண்டதால் இந்தியாவில் இருக்கும் எனது பெற்றோர் தவித்தனர். ஆனால் நான் செல்வதற்கான மெயில் எனக்கு கிடைத்ததும் தந்தையிடம் போனில் பேசினேன், அவர் வாயடைத்துப் போய்விட்டார். அவருக்கு பேச்சே வரவில்லை. இப்போது இந்தியா திரும்புவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.