'லாக்டவுன் முடிஞ்சதும் பிளைட்ல போலாமா'? ... 'புக்கிங் ஓபன் ஆகுமா'? .... விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 20, 2020 01:26 PM

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Flight restrictions to be lifted after COVID-19 spread under control

இதற்கிடையே மே 4-ம் தேதி முதல்  குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் 1 முதல் சர்வதேச விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  ''மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.