'கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'முதல் கட்டம் வெற்றி அடைஞ்சுட்டோம்...' எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 22, 2020 12:43 PM

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் முதல் கட்டம் வெற்றி அடைந்துள்ளதாக காணொளி மூலம் தெரிவித்தார்.

Success is the first stage of vaccine discovery for Corona

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸை அழிக்க பல நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். சில நாடுகளில் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

எதற்கும் சளைக்காத நமது தமிழகத்திலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். இன்று காணொளி மூலம் பேசிய எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது கண்டுபிடித்த இந்த மருந்தானது, அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.

மேலும் அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA