'ஐ.. லெக் பீஸ்'.. 'அப்பாடா.. ஒரு செகண்ட் உஷாரா இல்லனா எல்லாம் முடிஞ்சிருக்கும்'.. பதறவைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 01, 2019 08:47 PM

குஜராத்தின் வடதோரா உள்ளிட்ட பல பகுதிகளில், பெய்த கனமழையால், ஆங்காங்கு ஆளுயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம் சூழ்ந்துள்ளது.

crocodile attacks dog in Gujarat flood video goes bizarre

முன்னதாக விஷ்வாமித்ரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஊருக்குள் 4 மீட்டர் உயரம் வரை வெள்ள மட்டம் இருந்தது. இதனால் முதலைகளின் ஏரியாவான விஷ்வாமித்ரியில் மீண்டும் முதலைகள் தலைதூக்கின. ஆனால் அந்த இடத்தில் தற்போது குடியிருப்புப் பகுதிகள் வந்துவிட்டதால், சுமார் 300 முதலைகள் வாழும் அவ்விடமிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டிய சூழல் உண்டானது.

அதோடு, வடதோராவின் தர்ஷனம் செண்ட்ரல் பார்க்கிலும், இன்ன பிற வடதோரா ஏரியாக்களிலும் முதலைகள் வரத் தொடங்கியதாக தகவல்கள் எழுந்தன. அதில் ஒரு குடியிருப்புப் பகுதியில் முதலையிடம் நாய் ஒன்று மாட்டிக்கொண்ட வீடியோ பதைபதைப்பை ஏற்படுத்தியது. சுற்றியிருந்த குடியிருப்பு வாசிகள், வெள்ளத்தில் தத்தளித்த நாயை முதலையிடம் இருந்து மீட்க கயிறுகளை தூக்கி வீசிப் பார்த்தனர்.

 

ஆனால் முதலை நாயின் காலை கவ்வி, ஒரு காட்டு காட்டியது. எனினும் சமயோஜிதமாக நாய் தப்பியது. இந்த வீடியோ காண்போரை பதறவைத்துள்ளது. அதன் பின்னர் வனத்துறையினர் முதலைகளை பிடித்து பண்ணைகளுக்கு ஏற்றிச் சென்றனர்.

 

Tags : #HEAVYRAIN #FLOOD