'கொலைக்குற்ற' வழக்கில்.. ஸ்ட்ரெச்சரில் வந்து 'சரணடைந்த'.. பிரபல உணவக உரிமையாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 09, 2019 06:36 PM

ஜீவஜோதி மற்றும் சாந்தகுமார் வழக்கில் ஸ்ட்ரெச்சரில் வந்து ஆஜரான ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Hotel Owner rajagopal Surrendered after coming in ambulance

சாந்தகுமார் கொலை வழக்கில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆயுள் தண்டனை பெற்ற பிரபல உயர்தர சைவ உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, நீதிமன்றத்தில் சரணடையச் சொல்லி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.

ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெச்சரோடு வந்து ஆஜரான ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2001 முதல் நடந்து வந்த இந்த வழக்கு தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #HOTEL OWNER #CASE #VERDICT