‘நம்பிக்கையோட அனுப்பி வெச்சேன்..’ 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தைப் பார்த்துக் கதறிய தாய்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 15, 2019 03:14 PM

திருவள்ளூரில் காணாமல்போன 4 வயது சிறுமி பலத்த காயங்களுடன் சடலமாக முட்புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

4 year old girl brutally murderded in Tiruvallur

திருவள்ளூர் வெள்ளவேடு பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 25 பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் ஒரு தம்பதியின் 4 வயது மகளை அவர்களுடைய உறவினர்களான நிலக்கர் மற்றும் சந்தரவனம் ஆகியோர் நேற்று மதியம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாலை வரை அவர்கள் வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை அவர்களைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது நிலக்கரும், சந்தரவனமும் ஒரு இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். சிறுமி பற்றிய கேள்விக்கு அவர்கள் சரியாக பதிலளிக்காததால் சிறுமியின் தந்தை, உறவினர்களுடன் சேர்ந்து இரவெல்லாம் மகளைத் தேடியுள்ளார். ஆனால் சிறுமி எங்கும் கிடைக்காமல் போக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் செங்கல் சூளையின் பின்புறமுள்ள முட்புதரில் பலத்த காயங்களுடன் சிறுமி சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்றவர்கள் உட்பட 3 உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் சடலத்தைப் பார்த்த தாய், “நம்பிக்கையுடன் அவர்களுடன் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்கள். என் மகள் சடலமாக முட்புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ளாள். அவளை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை” எனக் கதறியுள்ளார்.  காணாமல்போன 4 வயது சிறுமி பலத்த காயங்களுடன் சடலமாக முட்புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #4YEAROLD #GIRL #BUTALMURDER