'கேப்டன் சூயஸ் கால்வாய் வர போகுது'... 'மீண்டும் இதயத்துடிப்பை எகிற வைத்த 'எவர் கிவன்' கப்பல்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சூயஸ் கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கிக் கொண்ட விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையாக எகிப்தின் சூயஸ் கால்வாய் அமைந்துள்ளது. இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவா் கிரீன்' என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.
ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழிப் பாதையாக உள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சம் தொற்றிக் கொண்டது. ’எவர் கிவன்’ கப்பல் தரைதட்டி நின்றதால் சர்வதேச நாடுகளில் வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாகப் பிற கப்பல்கள் செல்லமுடியாத நிலை உருவானது. கடினமான போராட்டத்துக்குப் பின்னர் இந்தக் கப்பல் மார்ச் 29ல் மீட்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே கப்பல் தரை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழிப்போக்குவரத்து தடைப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு ’எவர் கிவன்’ கப்பலை எகிப்து அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அதன்பின்னர் நீதிமன்றம் மூலம் இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ’எவர் கிவன் கப்பல் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இந்நிலையில், இந்தக் கப்பல் மீண்டும் சூயல் கால்வாய்க்கு வந்தது. இந்த முறை எவர் கிவன் வரும் முன்னரே பல்வேறு நடவடிக்கைகளையும் கால்வாய் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிரிட்டனிலிருந்து சீனா நோக்கி வந்த எவர் கிவன் கப்பல் எந்த சிக்கலும் இல்லாமல் சூயஸ் கால்வாயைக் கடந்தது.
கப்பல் கால்வாயைக் கடக்கும் வரை அனைவரும் உயிரே கையில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் எவ்வித சிக்கலும் இன்றி எவர் கிவன் கால்வாயைக் கடந்து சென்றது. எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்து செல்வது இது 22வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.