சும்மா சும்மா 'எங்க ரூட்ல' கிராஸ் பண்றீங்க...! 'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' - சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் 4 கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறுவதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்களன்று நான்கு சீன அரசாங்கக் கப்பல்கள், பெய்ஜிங்கின் சட்டவிரோத ஊடுருவலின் மற்றொரு வழக்கில் சிக்கியுள்ளன.
கடந்த இரு வாரங்களாக பிலிப்பைன்ஸ் நீர்வழி பாதையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவது அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஜப்பானின் உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் உட்ஸூரி மற்றும் தைஷோ தீவுகளுக்கு பகுதியில் சீனாவின் கப்பல்கள் ஊடுருவியுள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது, மேலும் கப்பல்களை உடனடியாக வெளியேறுமாறு என்.எச்.கே வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
இதுபோன்று ஜப்பான் தீவுகளிடையே சீனா கப்பல்கள் நுழைவது இது 16வது முறை என கூறியுள்ளது.
சர்வதேச கடல்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க - சீனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், மேற்கு பிலிப்பைன்ஸ் கடலுக்கான தேசிய பணிக்குழு பிலிப்பைன்ஸ் கடலில் 240 சீனக் கப்பல்களைக் கண்டறிந்ததாக அரசாங்க ரோந்துப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதோடு மார்ச் மாதத்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட 220 க்கும் அதிகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
