'ஒரு இஞ்ச் நகர முடியாது'... 'மொத்தமா செட்டில் பண்ணிட்டு நடையை கட்டுங்க'... 'சூயஸ் கால்வாய் கேட்ட இழப்பீடு'... பல்ஸை எகிறவைக்கும் தொகை!
முகப்பு > செய்திகள் > உலகம்சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பலால் ஏற்பட நஷ்டம் குறித்து சூயஸ் கால்வாய் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு கப்பலான 'எவர் கிவன்' கடந்த 23-ம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றபோது குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. சூயல் கால்வாய் உலகின் முக்கிய நீர் வழித்தடமாகப் பார்க்கப்படுகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழிப் பாதையாக உள்ளது.
கப்பல் தரைதட்டியதால் கால்வாய் இரு பக்கங்களிலும் 360-க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து நின்றன. உலகின் 12 சதவிகித வர்த்தகத்துக்குப் பயன்படும் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. புழுதி புயல் காரணமாகக் கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பித் தரைதட்டி நின்றதாகக் கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் 360-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. சூயஸ் கால்வாயில் அணிவகுத்த கப்பல்களை வேறு பாதையில் திருப்பி விடலாமா என்ற யோசனையில் இறங்கியது எகிப்து அரசு.
இழுவை படகுகள் மூலம் கப்பலைக் கரையிலிருந்து நகர்த்தும் பணிகள் முடக்கிவிடப்பட்டன. 800 பேர் இந்த கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சகதியை அகற்றும் ராட்சத எந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இழுவை படகுகளைக் கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலைக் கரையிலிருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக இரவுபகலாக நடந்து வந்தன.
சரியாக ஒரு வாரம் நடந்த தீவிர மீட்புப் பணியின் பலனாகக் கடந்த திங்கட்கிழமை எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது. எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயின் கிரேட் பிட்டர் லேக் என்ற பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர். கப்பல் விபத்தில் சிக்கிய தினத்திலிருந்து மீட்டது வரை ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட செலவுகள் மற்றும் நஷ்டத்தைக் கணக்கிட்டு வருகிறோம்.
அது கிட்டத்தட்ட 100 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி) இருக்கும். இந்த விபத்து தொடர்பான முழு விசாரணை முடியும் வரை கப்பல் இங்கேதான் இருக்கும் என சூயஸ் கால்வாய் நிர்வாகத் தலைவர் ஒசாமா ரபியா கூறியுள்ளார். சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட போக்குவரத்து தடையால் எகிப்து அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 1.4 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஒசாமா ரபியா குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
