அடர்ந்த காட்டுப்பகுதி.. "துர்நாற்றம் வந்த இடத்துல.." ஒரு மாசத்திற்கு பிறகு துலங்கிய துப்பு.. கோனே அருவி அருகே திடுக்கிடும் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 01, 2022 09:59 PM

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மதன். ஆட்டோ ஓட்டுநராக இவர் பணிபுரிந்து வருவதாக கூறப்படும் நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தமிழ் செல்வி என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

Andhra pradesh kona falls husband supsected police found body

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழ் செல்வி திடீரென காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

முன்னதாக, திருமணமான நாள் முதலே, மதன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் அடிப்படையில், தமிழ் செல்வியின் பெற்றோர்கள் மகள் காணாமல் போன விஷயத்தில் புகார் ஒன்றையும் போலீசார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, மதனை பிடித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு தமிழ்செல்வியை மதன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஏற்பட்ட தகராறில், மனைவியை கத்தியால் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை மதன் தெரிவித்துள்ளார்.

Andhra pradesh kone falls husband supsected police found body

இதனைத் தொடர்ந்து, செங்குன்றம் போலீசார் ஆந்திர மாநிலம் சென்று கோனே அருவியில், மதன் கூறிய இடத்தில் தமிழ் செல்வியின் உடலை தேடி உள்ளனர். ஆனால், அங்கே அவரது உடல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போல, கடந்த மாதம் தமிழ் செல்வியுடன் சென்ற மதன், திரும்பி வரும் போது தனியாக வந்த காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதனிடையே, சுமார் ஒரு மாதமாக தமிழ் செல்வியின் உடலை போலீசார் தேடி வந்த நிலையில், சமீபத்தில் கோனே அருவி அருகே உள்ள காட்டுப் பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அங்கே சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை கண்டெடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேல் ஆனதால், உடல் அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தமிழ் செல்வியின் உடை மற்றும் செருப்பை வைத்து அவர் தான் என்பதை அவரின் பெற்றோர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

Andhra pradesh kone falls husband supsected police found body

ஏற்கனவே, மதன் கத்தியை கொண்டு சென்றதால், திட்டமிட்டு இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, திருமணமாகி நான்கு மாதங்களே ஆனாலும், ஆரம்பம் முதலே மனைவி தமிழ் செல்வியிடம் மதன் தகராறு செய்து வருவதும், இதனால் பல இன்னல்களுக்கு அவர் ஆளானதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, இதற்கான காரணம் என்ன என்பதை மதனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது நண்பர்கள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமணமான நான்கே மாதத்தில், இளம்பெண்ணுக்கு நடந்த துயரம் பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

Tags : #ANDHRA #KONA FALLS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Andhra pradesh kona falls husband supsected police found body | India News.