"LKG படிக்கிறப்போ எலான் மஸ்க் ஒன்னு சொன்னான்.. நான் திகைச்சு போய்ட்டேன்".. மஸ்கின் அப்பா சொன்ன சீக்ரட்.. அப்பவே அப்படியா?
முகப்பு > செய்திகள் > உலகம்எலான் மஸ்கின் சிறுவயது வாழ்க்கை குறித்து அவரது தந்தை பேசியிருப்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
Also Read | "என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
கண்டிப்பான தந்தை
இந்நிலையில் எலான் மஸ்கின் தந்தை எர்ரோல் மஸ்க் (Errol Musk) அவரது வாழ்வில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். எலானின் சிறுவயது குறித்து அவர் பேசுகையில்," நான் மிகவும் கண்டிப்பான தந்தை. நான் சட்டத்தை மதிப்பவன். குழந்தைகள் என்னிடம் இருந்து அவற்றை கற்றுக்கொண்டார்கள். எங்களுடைய மூன்றாவது குழந்தை எலான். நானும் எனது மனைவியும் விவாகரத்து பெற்றபோது, அவன் என்னுடன் வசிக்க விரும்பினான். அதனால் தாய் வீட்டிலிருந்து வெளியேறி தனியாளாக ரயில் பயணம் செய்து என்னிடம் வந்தான். 9 வயதேயான எலான் மஸ்க்கை அழைத்துச்செல்ல ஜோஹன்னஸ்பர்க் ரயில்வே நிலையத்தில் நின்றது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ரயிலில் இருந்து இறங்கி தெளிவான பார்வையுடன் என்னை நோக்கி நடந்து வந்தான். அவனுடைய குழந்தைப் பருவம் இனிமையானதாக இருந்ததில்லை" என்றார்.
உலகின் பெரும் செல்வந்தன்
எலான் மஸ்கின் கனவுகள் குறித்து பேசிய அவர்,"எலான் ப்ரீ ஸ்கூல் படிக்கும்போது, தான் உலகின் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று சொன்னான். நான் திகைத்துப் போய்விட்டேன். ஆனால், சொல்லியபடியே செய்து காட்டியுள்ளான். ஒருநாள், எலானிடம் மதுபோதையில் இருந்த நபர் பேசிக்கொண்டிருந்தார். அவர், வளர்ந்த பிறகு என்ன செய்யவேண்டும் என கனவு காணலாம். ஆனால், அவை உனக்கு ஏமாற்றத்தையே அளிக்கும் என்றார். உடனே நீங்கள் ஒரு முட்டாளாக இருப்பீர்கள் என மஸ்க் பதிலளித்தான். அதுதான் எலான். அப்படித்தான் அவனுடைய சிந்தனை இருந்தது" என்றார்.
முன்னாள் ராணுவ வீரரான எர்ரோல் மஸ்க், தனது மகனும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் குறித்து பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.