"மொத்தமா 23 சாக்கு பைகள்.." போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்.. "வண்டிய நிறுத்தி செக் பண்ணதுல.." அதிர்ந்து போன போலீசார்
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்க்கண்ட் மாநிலம், போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய பொருள் ஒன்று, கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "வரும்போது சில்றை கொண்டு வாங்க..".. "ஓகே மேடம்".. ஆர்டர் பண்ண Cake-அ பார்த்து அதிர்ந்த இளம்பெண் 😀
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்குமார் மாவட்டத்தில், வாகனம் ஒன்றின் வழியே போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன் படி, ராஞ்சியில் இருந்து பாட்னா செல்லும் தேசிய நெடுஞ்சாலை 33 இல், மண்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹாசகர்ஹா என்னும் கிராமத்தின் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கிப் பிடித்து, சந்தேகத்தின் பெயரில் சோதனையை மேற்கொண்டுள்ளனர். மேலும், அதனை சோதித்துப் பார்த்த போது போலீசார் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஏனென்றால், மொத்தம் 23 சாக்கு பைகள் அந்த லாரிக்குள் இருந்துள்ளது. அவற்றைப் பிரித்து போலீசார் உள்ளே பார்த்த போது, அனைத்து சாக்கு பைகளிலும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக 7 குவிண்டால் போதைப் பொருள் (700 கிலோ) அவற்றுள் இருந்த நிலையில், இதன் விலை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதே போல, இத்தனை குவிண்டால் போதை பொருள் ஒரே இடத்தில் சிக்கி இருப்பதும் அதிகம் கேள்விபட்டிராத ஒன்று என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் உதவியாளராக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் மூலம், அவர்கள் அசாம் மாநிலம், கோகார்ஜர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த ரண்டு நமதா என்பதும் தெரிய வந்துள்ளது.
சுமார் 700 கிலோ மதிப்பிலான போதை பொருள் கடத்தல் மேற்கொண்டது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களையும் விரைவில் கண்டுபிடித்து அவர்களை கைது செய்வோம் என போலீசார் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read | கள்ளக்குறிச்சி மாணவி மறைவு.. யாருமில்லாத வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்.. இரவு நேரத்தில் நடந்த பரபரப்பு