ரட்சகன் ஹீரோயினுடன லலித் மோடி 'DATING' -ஆ.? ஒரே ஒரு பதிவால் பரபரப்பான சோசியல் மீடியா.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 15, 2022 02:37 PM

ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி, தற்போது பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுடன் வலம் வரும் தகவல், இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது.

Lalit kumar modi dating with sushmita sen pic gone viral

Also Read | "பொதுமக்கள் கிட்ட பேசுறப்போ சிரிச்சு தான் பேசணும்.. இல்லைன்னா 6 மாசம் சம்பளம் கட்".. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட மேயர்.. எங்கப்பா இருக்கு அந்த நாடு..?

இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் என்பது உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த போது, அதன் தலைவராக இருந்தவர் லலித் மோடி.

கடந்த 2010 ஆம் ஆண்டு, லலித் மோடி மீது சில புகார்கள் எழவே, ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Lalit kumar modi dating with sushmita sen pic gone viral

இதன் பின்னர், லண்டனில் வசித்து வரும் லலித் மோடி, முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் உலா வரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோர் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில், லலித் மோடி பதிவிட்டுள்ளார். மேலும், தனது கேப்ஷனில், "தற்போது நாங்கள் டேட்டிங்கில் தான் உள்ளோம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் அது கூட நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.

Lalit kumar modi dating with sushmita sen pic gone viral

அதே போல, மற்றொரு பதிவில், ஒரு புதிய தொடக்கம், புதிய வாழ்க்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிலும், விரைவில் திருமணம் செய்யப் போவது பற்றியும் லலித் மோடி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இது பற்றி புகைப்படங்களை வெளியிட்டு, லலித் மோடியே விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Lalit kumar modi dating with sushmita sen pic gone viral

தன்னுடைய 18 வயதில், மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 1996 ஆம் ஆண்டு, தஸ்தக் என்ற  பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதே போல, தமிழில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த 'ரட்சகன்' படமும், ஷங்கர் இயக்கி, அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த 'முதல்வன்' படத்தில் சுஷ்மிதா சென் நடனம் ஆடி இருந்த 'ஷக்கலக்கா பேபி' பாடலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | திருமணத்தை மீறிய உறவில் வந்த சிக்கல்.?.. சோகத்தில் மூழ்கிய இரண்டு குடும்பங்கள்.. திருச்சியில் பரபரப்பு..!

Tags : #LALIT KUMAR MODI #SUSHMITA SEN

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lalit kumar modi dating with sushmita sen pic gone viral | India News.