"எங்களுடைய வாழ்க்கைக்கு தேவதையை வரவேற்கிறோம்"..இரண்டாவது குழந்தைக்கு தந்தையான CSK-வின் ராபின் உத்தப்பா..வைரலாகும் CUTE போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jul 15, 2022 12:24 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

CSK Batsmen Robin Uthappa blessed with a baby girl

Also Read | கோத்தபயவின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர்.. அடுத்து என்ன..?.. சூடுபிடிக்கும் இலங்கை அரசியல் களம்..!

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். முன்னதாக சேலஞ்சர்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பி அணிக்காக அவர் விளையாடிய விதம் தேர்வு குழு உறுப்பினர்களை வெகுவாக ஈர்த்தது. இதனை தொடர்ந்தே அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உத்தப்பா தற்போது ஐபில் -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன உத்தப்பாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

திருமணம்

பெங்களூருவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான ஷீதால் கவுதம் என்பவரை ராபின் உத்தப்பா கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் (நீல் நோலன் உத்தப்பா) இருக்கிறார். இந்நிலையில், தங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக ராபின் உத்தப்பா - ஷீதால் கவுதம் தம்பதியினர் அறிவித்துள்ளனர்.

CSK Batsmen Robin Uthappa blessed with a baby girl

மேலும், தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் உத்தப்பா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேவதை

ராபின் உத்தப்பா தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,"நிறைவான இதயத்துடன், எங்களது வாழ்க்கையில் எங்கள் புதிய தேவதையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். டிரினிட்டி தியா உத்தப்பாவை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறோம். உலகிற்கு வர எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கும், உன் பெற்றோராகவும் உனது சகோதரராகவும் இருக்க எங்களை ஆசீர்வதித்ததற்காக நாங்கள் உனக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா, தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து, அவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | சத்தமாக பாட்டுக்கேட்ட மகன்.. சவுண்டை குறைத்த அப்பாவுக்கு நேர்ந்த கதி.. நடுங்கிப்போன குடும்பத்தினர்..!

Tags : #CSK BATSMEN #ROBIN UTHAPPA #BABY GIRL #ROBIN UTHAPPA BLESSED WITH A BABY GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK Batsmen Robin Uthappa blessed with a baby girl | Sports News.