சத்தமாக பாட்டுக்கேட்ட மகன்.. சவுண்டை குறைத்த அப்பாவுக்கு நேர்ந்த கதி.. நடுங்கிப்போன குடும்பத்தினர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jul 15, 2022 11:28 AM

பஞ்சாப்பில் சத்தமாக பாட்டுக்கேட்க கூடாது என சண்டைபோட்ட அப்பாவை மகனே கொலை செய்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Punjab Man arrested after he fought with his father over loud music

Also Read | கோத்தபயவின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர்.. அடுத்து என்ன..?.. சூடுபிடிக்கும் இலங்கை அரசியல் களம்..!

பஞ்சாப் மாநிலம் ஜாக்ரோனில் உள்ளது லகா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அக்ரூப் சிங் ஜூபா. 55 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய இளைய மகனான கரம் சிங் அவ்வப்போது தனது தந்தையுடன் தகராறில் ஈடுபடுவார் எனச் சொல்லப்படுகிறது. தினக்கூலியாக பணிபுரிந்துவரும் 25 வயதான கரம் சிங்  கடந்த திங்கட்கிழமை  பணி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டில் சத்தமாக அவர் பாட்டு கேட்டதாக தெரிகிறது.

தகராறு

இதனால் கோபமடைந்த அக்ரூப் சிங், சத்தத்தை குறைத்திருக்கிறார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் இது பெரிய சண்டையாக மாறவே, கரம் சிங் தனது தந்தையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த அக்ரூப் சிங் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து, அச்சமடைந்த கரம் சிங், வீட்டில் இருந்தால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என பயந்து வீட்டை விட்டு தப்பிக்க முடிவெடுத்திருக்கிறார்.

Punjab Man arrested by police after he fought with his father over lou

புகார்

தந்தை மற்றும் மகன் இடையே தகராறு ஏற்பட்டதன் விளைவாக அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்திருக்கின்றனர். அக்ரூப் சிங் தாக்கப்பட்டதை அறிந்த அண்டை வீட்டார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தப்பிக்க முயற்சி செய்த கரம் சிங்கை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த அக்ரூப் சிங்கின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

விசாரணை

இதனையடுத்து, அக்ரூப் சிங்கின் மூத்த மகன் தாவீந்தர் சிங், காவல்துறை அதிகாரிகளிடத்தில் நடந்ததை விவரித்து புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து கரம் சிங்கை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாட்கள் விசாரணை கைதியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில், மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | பூட்டிக் கிடந்த வீடு.. "கதவ ஒடச்சிட்டு உள்ள போய் பாத்ததுல.." நடுங்கிய கிராமம்.. "உள்ள இதோட 'Smell' வேற வந்துருக்கு.."

Tags : #PUNJAB #MAN #ARREST #POLICE #FATHER #LOUD MUSIC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Punjab Man arrested after he fought with his father over loud music | India News.