திருமணத்தை மீறிய உறவில் வந்த சிக்கல்.?.. சோகத்தில் மூழ்கிய இரண்டு குடும்பங்கள்.. திருச்சியில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சொல்லப்படும் இளைஞர் தனது காதலியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மேல்கல்கண்டார் கோட்டை, பழைய அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் வினோத் குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 36 வயதான வினோத்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில், இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது திருமணமும் விவாகரத்து பெறும் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே மேல்கல்கொண்டார் நாகம்மை வீதியில் வசித்துவரும் தனது தந்தை சுந்தரமூர்த்தி வீட்டுக்கு அவ்வப்போது வினோத் குமார் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது, எதிர்வீட்டில் வசித்துவந்த பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், இருவருக்குள்ளும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
பயங்கரம்
இந்நிலையில், நேற்று தனது காதலி வீட்டுக்குச் சென்ற வினோத் குமார் அவரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கேயே மயக்கமடைந்து விழுந்த அந்த பெண் உயிரிழந்திருக்கிறார். மேலும், வினோத் குமார் தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ், காவல் ஆய்வாளர் தனசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கொலை நடந்த பகுதிக்கு மாநகர துணை ஆணையர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
விசாரணை
இதனை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், வினோத் குமாரின் உடலை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சொல்லப்படும் இளைஞர் தனது காதலியை கொலை செய்துவிட்டு தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read | சத்தமாக பாட்டுக்கேட்ட மகன்.. சவுண்டை குறைத்த அப்பாவுக்கு நேர்ந்த கதி.. நடுங்கிப்போன குடும்பத்தினர்..!