"கட்டுனா அவர மட்டும் தான்".. 37 வயசு காதலனுக்காக.. பல வருசமா காத்திருந்த 70 வயது பெண்.. கடைசியில் நடந்தது என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்காதலுக்கு கண்ணில்லை என சொல்லுவார்கள். அதற்கு காரணம், காதல் என்பது நிறம், வயது, மொழி, இனம் என எதையுமே பார்க்காமல் இவை அனைத்தையும் கடந்து வருவதால் தான், அப்படி ஒரு வாக்கியம் கூறப்படுகிறது.
இதனை நிஜமாக்கும் விதத்தில், பாகிஸ்தானை சேர்ந்த ஜோடி ஒன்று வயது என்பதைத் தாண்டி, தற்போது திருமணம் செய்துள்ளதும் அதன் பின்னால் உள்ள காரணமும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கிஷ்வர் பிபி. இவருக்கு தற்போது 70 வயதாகிறது. இவர் 37 வயதே ஆகும் இப்திகர் என்பவரை பல ஆண்டுகளுக்கு முன்னரே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மறுபக்கம், இப்திகருக்கும், தன்னுடைய இளம் வயதில் கிஷ்வர் மீது காதல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அந்த சமயத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாக கூறப்படுகிறது.
சுமார் 33 வயது வித்தியாசம் இருவருக்கும் இடையே இருந்ததால், அந்த சமயத்தில் அவர்களின் பெற்றோர்கள் இந்த காதலை எதிர்த்துள்ளனர். ஏற்கனவே பல ஆண்டுகளாக திருமணம் எதுவும் செய்யாமல் இருந்து வந்த கிஷ்வர், இப்திகர் மீது காதல் ஏற்பட்ட பிறகு, வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதற்கு மத்தியில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இப்திகர், ஆறு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதே வேளையில், தனது திருமணத்திற்கு பின்னரும் கிஷ்வரை அடிக்கடி இப்திகர் சந்தித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தற்போது பல ஆண்டுகள் கழித்து, அனைவரின் சம்மதத்துடன் காதலன் இப்திகரை கரம் பிடித்துள்ளார் கிஷ்வர். வாழ்க்கையில் தனது காதலன் இப்திகர் இல்லை என்றால், வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என முடிவு செய்திருந்த கிஷ்வர், தற்போது காதலனை கரம் பிடித்ததால், மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.
அதே போல, இப்திகரின் முதல் மனைவியும், தனது கணவரின் காதலனான கிஷ்வருடன் சேர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஹனிமூனுக்கு தாங்கள் கராச்சி பகுதிக்கு செல்ல இருப்பதாகவும் இப்திகர் - கிஷ்வர் ஜோடி தெரிவித்துள்ளனர்.
கிஷ்வர் - இப்திகர் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இது பற்றி பல விதமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.