இந்தா வந்துட்டோம்ல... ட்விட்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த எலான் மஸ்க்.. அவர் தூக்கிட்டு வந்த பொருளை பத்திதான் உலகமே பேசுது.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Oct 27, 2022 10:44 AM

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Elon Musk carries sink into Twitter HQ ahead video goes viral

Also Read | "மனசுக்குள்ள அவரை திட்டுனேன்.. ஆனா".. பரபரப்பான மேட்ச்.. கடைசி ரன் அடிக்கும் முன் நடந்தது என்ன??.. அஸ்வின் பகிர்ந்த விஷயம்!!

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

Elon Musk carries sink into Twitter HQ ahead video goes viral

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில்  ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறிய மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது.

இதனிடையே சமீபத்தில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இதுதொடர்பாக கடிதம் ஒன்று ட்விட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை நிரூபிக்கும் வகையில், மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் எனவும் ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக, டெலாவர் நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க்கிற்கு அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார் மஸ்க். கையில் sink உடன் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த மஸ்க் இந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"ட்விட்டர் தலைமையகத்தில் நுழைகிறேன். லெட் தட் சிங்க் இன் (Entering Twitter HQ – let that sink in!)" என தனக்கே உரித்தான பாணியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பயோவை Chief Twit எனவும் அவர் மாற்றியிருக்கிறார்.

Elon Musk carries sink into Twitter HQ ahead video goes viral

மேலும், அடுத்த டீவீட்டில், ட்விட்டர் அலுவலகத்தில் பலரை தான் சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ட்விட்டர் டீல் பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க்கிற்கு டெலாவர் நீதிமன்றம் அளித்திருந்த அவகாசம் நாளை (அக்டோபர் 28) மாலை 5 மணியுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், ட்விட்டர் அலுவலகத்திற்குள் மஸ்க் நுழைந்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Also Read | "தோனி சொன்னது நடந்துரும் போலயே".. மீண்டும் நடக்கும் 2011 WC மேஜிக்?.. "அப்போ இந்தியாவுக்கு தான் கப்பா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

Tags : #ELON MUSK #TWITTER #TWITTER HQ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk carries sink into Twitter HQ ahead video goes viral | World News.