'ப்ளீஸ் இந்த வீடியோலாம் கண்டிப்பா பாத்துரு...' 'செல்போன்ல மட்டும் இல்ல, ஆன்லைன்ல கூட ஒண்ணு இருக்கு...' வெந்த புண்ணுல 'வெடிகுண்டு' வைத்த மனைவி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 05, 2020 02:27 PM

பெங்களூரில் ஆபாசப் படம் பார்க்க கட்டாயப்படுத்திய மனைவியின் மீது விவாகரத்து கேட்டு மனு செய்துள்ளார்..

The husband, who was aggrieved by his wife\'s actions

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் தனது திருமணத்துக்கு பெண் தேடி மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தார். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு கிழக்கு பெங்களூரில் தங்கி தங்களது வாழ்க்கையை தொடங்கினர். அப்போது பெண் டாக்டர் திருமணத்துக்கு முன்பு தனக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், பின்பு அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கணவரிடம் கூறினார். அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இயல்பாக கடந்து சென்றார்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. பெண் டாக்டர் தனது கணவரை ஆபாச வீடியோக்கள் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதோடு, அந்த காட்சிகளை போன்று நடந்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார்.

ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை ஐ.டி. ஊழியர் விரும்பவில்லை. எனினும் அவர் தனது மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணியுள்ளார். இந்த நிலையில் எதேச்சையாக மனைவியின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது அதில் ஒரு ஆபாச வீடியோ இருந்ததைக் கண்டார். அதில் தனது மனைவியுடன் வேறு ஒரு வாலிபர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்ட போது அந்த வாலிபர் தனது முன்னாள் காதலன் என கூறினார். மேலும், இந்த பழைய வீடியோவை காட்டி மிரட்டி வருவதாகவும் கூறிய மனைவி கூறினார்.

இந்நிலையில் ஜனவரி 3-வது வாரத்தில் கணவர் ஆன்லைனில் தனது மனைவி மற்றுமொரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இதுபற்றி அவர் மனைவியிடம் கேட்ட போது அவர் திருமணத்திற்கு முன்பு பலருடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வீடியோக்கள் எப்படி ஆன்லைனில் வெளியானது என்பது எனக்கு தெரியாது என கூறினார்.

மனைவியின் செயல்களால் வேதனை அடைந்த கணவன் அவரை பிரிய முடிவு செய்து விவாகரத்து கேட்டு மனு செய்தார். அதன் பேரில் குடும்பநல ஆலோசனை நிர்வாகிகள் இருவரையும் நேரில் அழைத்து பேசி ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Tags : #CHEATED