‘என் அம்மாவ எங்கிட்ட குடுங்க!’.. ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடிய மகள்.. கலங்க வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகை அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ்க்கு ஒருபுறம் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு புறம் உலகில் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நோய் உருவான சீனாவின் வுஹான் நகரில் இருந்து மக்கள் பலரும் தத்தம் நாடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர். அவர்களுள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வுஹான் நகரில் கொரோனா வைரஸ், தாக்கத்தால் உயிரிழந்த தாய்க்காக மகள் ஒருவர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கும் அளவுக்கு வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் இறந்ததை அடுத்து, அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற மருத்துவர்கள், அந்த தாயின் மகள் ஓடிவரும்போது தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றனர்.
அம்மா.. அம்மா என்று கதறி அழுத அந்த பெண்ணுக்கு, இறந்துபோன தாயிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால், அப்பெண் தனது தாயைப் பார்ப்பதை மருத்துவர்கள் தடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.