'என்ன இது.. எதித்த மாதிரி ஃப்ளைட் வருது?'.. 'பாதை' மாறிச் சென்ற 'போதை' நபர்!.. ‘தரமான’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Jan 18, 2021 03:59 PM

போதைப் பொருட்களை அதிகமாக மனிதர்கள் உட்கொள்வதால் சிலர் நிதானம் தவறுகின்றனர் என்று கூறப்படுகிறது. அந்த அவர்கள் அந்த இழந்தவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சில தவறுகளை நிஜவாழ்க்கையில் செய்து வருகின்றனர்.

drunk man drives car on runway during flight landing video

அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. 12 நாட்களுக்கு முன்னர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் நபர் ஒருவர் குடிபோதையில் துணிச்சலாக விமானம் தரை இறங்கும் நேரத்தில், விமானத்துக்கு எதிரே காரை ஓட்டிச் சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். பாங்காக்கில் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்திலேயே வைத்து அந்த நபரை அதிரடியாக துரத்தி பிடித்து கைது செய்தனர்.

விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ ஒன்றினை தாய் விசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இருந்ததன்படி விமான நிலையத்தில் விமானம் ஓடு தளத்தில் தரை இறங்குகிறது. அதே நேரத்தில் விமானத்திற்கு எதிரே இருந்து கார் ஒன்று விமான ஓடுபாதையில் நிலைதடுமாறி வந்து கொண்டிருக்கிறது. இந்த காரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்பாக துரத்தி சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்ய 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைக் கண்டு வருகின்றனர்.  குடிபோதையில் காரை ஓட்டி வந்த அந்த நபர் சேதங்கள் எதையும் ஏற்படுத்தும் முன்பாகவே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் விமான ஓடுதளத்தில் விமானம் இறங்கி வரும் அதே நேரத்தில் அதற்கு எதிர்த்திசையில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் சுயநினைவின்றி இந்த நபர் கார் ஓட்டிச் சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியது. அத்துடன் அந்த நபரின் காரில் மதுபாட்டில், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை இருந்தன. அவற்றையும் விமான அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனையடுத்து அவர் மீது விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது, சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்தது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரிவின் கீழ் கைது வழக்கு பதிவு செய்தனர். சட்ட விதிகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை தாண்டி விமான நிலையத்தில் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. 

ALSO READ: 'வெற்றிப் படிகட்டு!'.. '30 நிமிஷத்துல 33 புளோர்!'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்!’ .. வைரல் வீடியோ!

2016 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஒருவர் காதலுக்கான போராட்டத்தின்போது காருடன் விமான நிலையத்துக்குள் அத்துமீறி அவர் நுழைந்ததை அடுத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Drunk man drives car on runway during flight landing video | World News.