'டிரம்ப்' ஏன் அப்படி அவமானப்படுத்தினார்?... 'கடுப்பில் பெண் சபாநாயகர் செய்த காரியம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, டிரம்ப் உரையின் நகலை கிழித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாவது முறையாக உரையாற்றினார். வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில், டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார். உரையை தொடங்குவதற்கு முன் நான்சி பெலோசி, டிரம்ப்யிடம் கைகுலுக்க முயற்சி செய்தார். ஆனால் அதை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து முகத்தில் தனது அதிருப்தியை காட்டிய நான்சி, டிரம்ப் தனது உரையை தொடங்கிய போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தார். இந்நிலையில் டிரம்ப் உரையாற்றி முடித்ததும், தனது மேசையில் இருந்த டிரம்ப் பேச்சின் நகலை நான்சி பெலோசி கிழித்தார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதோடு இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
