'பறிமுதல்' செய்யப்பட்ட 'வாகனங்களை' திரும்ப 'பெற்றுக் கொள்ளலாம்...' 'காவல்துறை சார்பில் அறிவிப்பு...' 'வழிமுறைகள் குறித்தும் விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 16, 2020 06:56 PM

ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vehicles recovered during the curfew can be returned

ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் இதுவரை 1 லட்சத்து 79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பெறுவதற்கு போலீசார் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அதன்படி தங்களது வாகனங்களை பெற விரும்புவோர் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12:30 வரை மட்டுமே வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை என ஒரு நாளுக்கு 10 நபர்களுக்கு மட்டுமே வாகனங்கள் வழங்கப்படும்.

தேவைப்படின், அதிகப்படியாக 01:00 மணி வரை வாகனங்களை ஒப்படைக்கும் பணி நடைபெறும். இத்தருணத்தில் சமூக இடைவேளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்., வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் முன்னதாகவே அனுப்பப்படும்.

தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்: வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆர்., நகல், வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி., புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும்.