‘பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா உறுதி!’.. ‘ஆர்டர் செய்த 72 குடும்பங்களின் தற்போதைய நிலை இதுதான்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் பீட்சா டெலிவரி செய்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் டெலிவரி செய்த 22 குடும்பங்கள் டெல்லியில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன

டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள மால்வியா நகரைச் சேர்ந்த பீட்சா டெலிவரி செய்யும் 19 வயது வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப் பட்ட நிலையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இவருக்கு நோட் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து அவருடன் டெலிவரி பாயாக வேலை பார்த்த சக வாலிபர்கள் 17 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் உறுதி செய்யப்பட்ட இந்த வாலிபர் கடந்த 20 நாட்களாக டெலிவரி செய்த 72 குடும்பங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் அத்தனை பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
