4 வருசமா சிறுநீர் கழிக்கும்போது ஒரே வலி.. X-RAY-ல் தெரியவந்த அதிர்ச்சி.. கடைசியில் பெண் சொன்ன பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நான்கு வருடங்களாக பெண்ணின் சிறுநீர்ப்பையில் கண்ணாடி டம்ளர் சிக்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துனிசியா நாட்டைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், 4 வருடங்களாக சிறுநீரகப் பாதை தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது சிறுநீர்ப்பையில் 8 சென்டி மீட்டர் அகலத்தில் செவ்வக வடிவிலான கல் போன்ற ஒரு பொருள் இருப்பதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பெண்ணிடம் இதுகுறித்து மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்துள்ளார். அதில் 4 வருடங்களுக்கு முன்பு பாலியல் இன்பம் பெற வேண்டி கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராத விதமாக உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், ‘சிஸ்டோலிதோடோமி’ என்ற அறுவை சிகிச்சையின் மூலம் அப்பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த கண்ணாடி டம்ளரை அகற்றினர். தற்போது அப்பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
