'ஒரே நேரத்தில் 2 நிச்சயதார்த்த மோதிரம்'... 'போகிற போக்கில் நகை கடை பெண்ணிடம் உளறிய இளைஞர்'... இறுதியில் காத்திருந்த வேற லெவல் ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 25, 2021 04:28 PM

ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய இளைஞருக்கு இறுதியில் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது.

customer who purchased two rings for his girlfriend and his mistress

Jake என்ற இளைஞர் ஒரு 45 டாலர் மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரத்தையும், ஒரு 50 டாலர் மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரத்தையும் வாங்கியுள்ளார். அவர் வாங்கியதோடு நிற்காமல் அதை யாருக்கெல்லாம் வாங்கினேன் தெரியுமா என நகைக் கடை ஊழியரான Eli என்ற இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அவரும் நீங்கள் யாருக்கெல்லாம் வங்கியுள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளைஞர் ஒரு மோதிரம் தனது காதலிக்கும், இன்னொரு மோதிரம் தான் ரகசிய உறவு வைத்துள்ள ஒரு பெண்ணுக்கும் வாங்கியுள்ளதாக உளறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த இரண்டு பெண்களையும் Jake என்ற அந்த இளைஞரிடம் இருந்து காப்பாற்ற முடிவு செய்துள்ளார். இதற்காகத் தனது வேலையை விட்ட அந்த பெண், அந்த மோதிரங்களின் படங்களையும் வெளியிட்டு டிக் டாக்கில் அந்த பெண்களுக்குச் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

customer who purchased two rings for his girlfriend and his mistress

அதில், உங்கள் காதலனின் பெயர் Jake என்றால் அவர் Montreal என்ற இடத்தில் வசித்து வந்தால் உங்களுக்கு ஒரு செய்தி, அவர் ஒரே நேரத்தில் இரண்டு நிச்சயதார்த்த மோதிரங்களை வாங்கியுள்ளார். ஒன்று அவர் காதலிக்கென்றும், மற்றொன்று அவர் ரகசிய உறவில் உள்ள பெண்ணுக்கும் வாங்கியுள்ளார், எனக் கூறி அந்த மோதிரங்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவரை விடச் சிறந்த காதலனை அடைய நீங்கள் தகுதியுடையவர்கள் என்று நான் நினைக்கிறேன் என அந்த வீடியோவில் Ei தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த ஆளைக் காட்டிக்கொடுத்துவிட்டதால் உங்களுக்கு ஆபத்து வரலாம் பத்திரமாக இருங்கள் என்றும், நீங்கள் நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் என்றும் கூறி பாராட்டும் தெரிவித்துள்ளார்கள். 

customer who purchased two rings for his girlfriend and his mistress

இதற்கிடையே ஒரு பெண், தனது நெருங்கிய தோழியின் காதலனின் பெயர் Jake என்றும், என் தோழிக்கு அந்த மோதிரம் கிடைத்துவிட்டது. அது அவராக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறி, அவளிடம் நான் இந்த சம்பவத்தைக் கூறுகிறேன், உங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Customer who purchased two rings for his girlfriend and his mistress | World News.