'பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில்’... ‘6 பேருக்கு உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்நாடாக கடந்த டிசம்பர் 8-ம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், பிரிட்டனில் மரபணு உருமாற்றம் அடைந்து 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் இடையே விமான சேவையை நிறுத்தியுள்ளன.
மேலும் கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
33,000 பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 3 பேர், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர், புனேவை சேர்ந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைனால் அந்த 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.