'பெண் பத்திரிக்கையாளருக்கு 4 வருஷம் ஜெயில்...' 'அவங்க பண்ணது பெரிய மனித உரிமை மீறல்...' - சீனா அதிரடி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 28, 2020 10:25 PM

கடந்த வருடம் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்து தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.

china Female journalist jailed for 4 years false information

ஜாங் ஜான் என்னும் பெண் பத்திரிக்கையாளர் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில், வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக கூறி, சீன அரசு நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது. அதில் முதல் விசாரணை இன்று ஜாங் ஜான் முதலில் எதிர்கொண்டார்.

அப்போது கொரோனா பரவிய ஆரம்ப காலகட்டத்தில் வைரஸ் தொற்றுக்களை அறிக்கை செய்த விதம் சிக்கலைத் தூண்டியது எனவும், பிப்ரவரி மாதத்தில் அவரது நேரடி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன. இது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், ட்விட்டர், யூடியூப் மூலமாக ஜான் தனது செய்திகளைப் பரப்பினார் எனக் கூறப்படுகிறது.

மேலும் அரசாங்கத்திற்கு எதிராக தவறான தகவல்களை அதாவது 'மக்களுக்கு அரசாங்கம் போதுமான தகவல்களை வழங்கவில்லை, பின்னர் நகரத்தை பூட்டியது. இது ஒரு பெரிய மனித உரிமை மீறல்' என கட்டுரையில் அவர் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளை பத்திரிகையாளர் ஜாங் ஜான் பேட்டியாகக் கொடுத்தார் என்றும் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, தற்போது ஷாங்காய் புடாங் புதிய மாவட்ட மக்கள் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த 37 வயதான ஜாங்கின் உடல்நலம் பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. தற்போது அவர் ஒரு நாசி குழாய் வழியாக கட்டாயமாக உணவு உட்கொள்ளவைக்கப்படுகிறார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China Female journalist jailed for 4 years false information | World News.