‘பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன்’... ‘தொடர்பில் இருந்த’... ‘மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’... ‘எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு???’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பிரிட்டன் தொடர்பு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து டிசம்பர் 8-ம் தேதி செலுத்திய நிலையில், அங்கு மரபணு உருமாற்றம் அடைந்து, 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து உஷாரான பல நாடுகள் அந்த நாட்டுடன் எல்லையை மூடப்பட்டு, போக்குவரத்தை துண்டித்து தனிமைப்படுத்தின.
இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து தமிழகம் வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். தமிழகம் திரும்பியோர், அவர்களுடன் விமானத்தில் பயணித்தோர், அவர்களை சந்தித்தோர் என 2391 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் திரும்பியவர்களை பரிசோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதில் ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர் தஞ்சையில் 3 பேர், மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருவர் என 10 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
