VIDEO : 'பொண்டாட்டி' தொல்ல இங்க இல்ல... 'கறி', 'முட்ட', 'சாப்பாடு'ன்னு 'ஜாலியா' இருக்கோம்... 'கொரோனா' வார்டு அட்ராசிட்டிஸ்... நோயாளி வெளியிட்ட அசத்தல் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவை கொரோனா வார்டாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர், கல்லூரியின் மொட்டை மாடியில் நின்று கொண்டு ஜாலியாகவும், அதே நேரத்தில் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், கொரோனா கண்டுபிடித்த நபருக்கும், தமிழக அரசுக்கும், தனக்கு கொரோனா இருக்கிறது என உறுதி செய்த மருத்துவர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் போது ஏற்படும் மனைவியின் தொல்லை எதுவும் இல்லாமல், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், சரியான நேரத்தில் சாப்பாடு இங்கு தருகிறார்கள். மனைவி கூட சரியான நேரத்தில் உணவு தருவதில்லை. கறி, முட்டை என சிறந்த உணவு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் விட மிக முக்கியமாக, கொரோனா தொற்றைக் கண்டு பலர் அஞ்சியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டால் அதனை தைரியத்துடன் எதிர்கொள்ளவும் ஆறுதல் கூறுகின்றனர்.

மற்ற செய்திகள்
