'ஹாரிபாட்டரின்' மாய 'உலகத்திற்குள்'... ஒரு வித்தியாசமான 'மதுபான' விடுதி... 'லண்டனில்' அலைமோதும் 'கூட்டம்'..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 05, 2020 05:41 PM

பிரபலமான ஹாரிபாட்டர் படத்தை நினைவுகூரும் விதமாக லண்டனில் இயங்கி வரும் மதுபான விடுதி பலரையும் கவர்ந்ததையடுத்து, ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

cocktail bar offers harry potter themed potion classes

ஜே.கே. ரௌலிங்கின் பிரபல நாவலான ஹாரிபாட்டர், திரைப்படமாக வெளிவந்து உலகம் முழுவதும்  பெறும் வெற்றியை பெற்றது. இந்த படம் 8 பகுதிகளாக வெளியாகி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது, இங்கிலாந்து தலைநகர்  லண்டனில் இயங்கிவரும் மதுபான விடுதி ஒன்றில் இப்படத்தில் வருவது போன்று குடுவை மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உருண்டை வடிவில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பந்துகளில் வண்ண லேசர் கதிர்கள் ஒளிர விடப்பட்டுள்ளன. வித்தியாசமான இந்த மதுபான விடுதியில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. திரைப்படத்தில் வருவது போன்ற தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : #HARRYPOTTER #COCKTAIL BAR #LONDAN #ENGLAND