'கடல்' கொந்தளிப்பில் சிக்கிக் கொண்ட 'விசைப்படகு'... 'டால்ஃபின்' மீனின் வியக்க வைக்கும் 'செயல்'... 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் கடல் கொந்தளிப்பில் சிக்கி அலைக்கழிக்கப்பட்ட படகுக்கு டால்ஃபின் மீன் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இங்கிலாந்தில் வீசிய டென்னிஸ்(Dennis) புயல் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல் பகுதிகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்ன்வெல் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று புயலில் சிக்கியது. இதனால் கடலில் வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட படகுக்கு உதவியாக டால்ஃபின் ஒன்று முன்வந்தது.
அந்த டால்ஃபின், படகுக்கு முன்னதாக பாய்ந்து சென்று வழிகாட்டியது. டால்ஃபின்களின் இந்தச் செயல்பாடுகளை குறிப்பிட்ட படகின் முன்பாகச் சென்ற மற்றொரு படகில் சென்றவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
பொதுவாக மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுத்திறனில் மேம்பட்ட உயிரினம் என்றால் அது டால்ஃபின் தான் என கூறப்படுகிறது. அது குரங்குகளை விட சற்று அதிகமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளதாக உயிரியல் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாகவும் பல பகுதிகளில் கடலில் சிக்கியவர்களுக்கு டால்ஃபின்கள் உதவியிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
