சிறுமியை பள்ளிப் பாடம் எழுத வைத்து, பியானோ வாசிக்க வைக்கும் வளர்ப்பு நாய்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 14, 2019 06:00 PM

நாம் எழுதி வைத்ததையே எதாவது செய்துவிடும் செல்லப் பிராணிகளுக்கு நடுவில் சிறுமியை பொறுப்பாக பள்ளிப் பாடம் எழுத வைக்கிறது பான்டன் என்கிற இந்த நாய்.

father trains pet dog to supervise daughters homework and piano class

சீனாவின் குய்சோ மாகாணத்தில் வசித்து வரும் சூ லியாங் என்பவருடைய வளர்ப்பு நாய் பான்டன். இவர் சிறுவயதிலேயே அதற்கு பூனையிடமிருந்து உணவைப் பாதுகாக்க பயிற்சி அளித்துள்ளார். அதிலிருந்தே தனது மகளின் பள்ளிப் பாடத்தை சரியாக செய்ய வைக்கவும் பயிற்சி அளிக்க யோசனை தோன்றியதாகக் கூறுகிறார் லியாங்.

சிறுமி பள்ளிப் பாடங்களை எழுத அந்த டேபிள் மேலே கால்களை வைத்து நின்றுகொண்டு முழுவதையும் முடிக்க வைக்கிறது இந்த செல்ல நாய். அதுமட்டுமில்லாமல் பியானோ வாசிக்கும்போது அருகிலேயே இருந்து வேறு எதிலும் சிறுமியின் கவனம் செல்லாமலும் பார்த்துக் கொள்கிறது.   

பள்ளிப் பாடங்களை சரியாகச் செய்யாமல் செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்த மகளும் இப்போது, “பான்டன் கூட இருப்பதால் தொந்தரவு எதுவுமே இல்லை. தனியாக இல்லாமல் வகுப்பில் நண்பர்களுடன் இருப்பது போல இருக்கிறது” என்கிறார் மகிழ்ச்சியாக.

Tags : #CHINA #DOG #GIRL