VIDEO: 'ஜன தொகையைக் குறைக்க... இலுமினாட்டிகளின் சதியா கொரோனா வைரஸ்!?'... பரபரப்பை ஏற்படுத்திய 'ஹீலர் பாஸ்கர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 20, 2020 04:36 PM

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

healer baskar arrested for spreading fake news about covid19

கொரோனா வைரஸ் குறித்து வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி. மக்கள் தொகையை குறைக்கவே அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம் அமைச்சர்கள் எதை செய்ய வேண்டும் என்ற தகவல்களை அவர்கள் இலுமினாட்டிகள் தான் தருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கூட திட்டமிட்டு ஊசிப்போட்டு கொலை செய்கின்றனர்" என்று அந்த வீடியோவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலியான செய்திகள் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

 

Tags : #CORONAVIRUS #HEALERBASKAR #FAKENEWS