'ஒரு வாரத்துக்கு' முன் 'பெண் மேனேஜர்'!.. 'இப்போ சுஷாந்த்'.. இரண்டு மரணத்துக்கும் தொடர்பு இருக்கா? போலீஸாரின் பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திடைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவரும், கடந்த வருடம் வெளியான தற்கொலைக்கு எதிரான படமொன்றிலும் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். பீகாரின் பாட்னாவில் பிறந்த, தற்போது 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் இந்திய திரை, அரசியல், விளையாட்டு உலகம் மட்டுமல்லாது பொது மக்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியன் கடந்த ஜூன் 8-ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு மரணங்கள் குறித்தும் விசாரித்து வருவதாகவும், அவ்வழக்கு தனியாகவும், இவ்வழக்கு தனியாகவுமே விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ள காவல்துறையினர், இந்த தனித்தனி மரணங்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதற்கான எந்த காரணிகளும் இதுவரையில் இல்லை என்றும் மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒருவாரத்துக்கு முன்னர் தனது முன்னாள் மேனேஜர் திஷா சலியன் தற்கொலை செய்துகொண்டபோது, “இது பேரழிவு செய்தி. திஷா சலியன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!” என்று சுஷாந்த் சிங் ராஜ்புட் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவரது உறவினர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
