'விண்வெளியில கன்ட்ரோல் இல்லாம சுத்திட்டு இருந்த சீன ராக்கெட்...' 'இன்னைக்கு பூமிக்குள்ள என்ட்ரி ஆகப் போகுதாம்...' - எங்க விழுறதுக்கு வாய்ப்பிருக்கு...?
முகப்பு > செய்திகள் > உலகம்கட்டுபாட்டை இழந்த 110 அடி உயரமுள்ள சீன ராக்கெட் இன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ராக்கெட்டின் மொத்த எடை 22 மெட்ரிக் டன் ஆகும். இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில், "பூமியின் வளிமண்டலத்தில் ராக்கெட் நுழைய போகும் நேரத்தை உறுதியாக கூற முடியாது. ஆனாலும் சீனா அனுப்பிய லாங் மார்ச் 5 பி ராக்கெட் கடலில் விழுவதற்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பாதுகாப்பு கூட்டணியின் நிறுவனர் டான் ஓல்ட்ரோஜ் இதுப்பற்றி கூறுகையில், "பூமியின் பெரும்பகுதி தண்ணீரில் மூடியுள்ளது, எனவே ஆபத்து ஏற்பட வாய்புகள் மிக குறைவு . மனிதர்கள் இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை" என கூறியுள்ளார்.
பூமத்திய ரேகையிலிருந்து 41.5 டிகிரி சாய்வில் இந்த ராக்கெட் பூமியை குறுக்காகச் சுற்றி வருகிறது, அதாவது இது பூமியின் பெரும்பகுதியைக் கடந்து செல்கிறது, அதாவது சிலி மற்றும் தெற்கே நியூசிலாந்தின் மேல் பாதி வரை கடந்து சுற்றுகிறது.
ஒருவேளை இந்த ராக்கெட்டால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு சீனா இழப்பீட்டு பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் முன்மாதிரி விண்வெளி நிலையம், தியாங்காங் -1, கட்டுப்பாடில்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து பசிபிக் கடலில் விழுந்தது. வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு விண்வெளி நிலைய திட்டத்தை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், சீனா தனது விண்வெளி நிலைய திட்டத்தில் வரும் வாரங்களில் அதிக ராக்கெட்டுகளை அனுப்பும் பணியில் வேகமெடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
