'போலியான மார்பகங்கள்'... 'பல மில்லியன் பணம்'... சீனாவை கதிகலங்க வைத்துள்ள பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவ சீனா தான் காரணம் என உலக நாடுகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், அங்கு மேலும் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்புக்கு முக்கிய காரணம் சீனாவின் கிழக்கு Zhejiang மாகாணத்தில் இருக்கும் காவல்துறை வெளியிட்ட வீடியோ தான். கொரோனா காரணமாகச் சீனாவில் இன்னும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இணையத்தில் நடக்கும் ஆபாச மற்றும் நிர்வாண உரையாடல்கள் குறித்து பல்வேறு புகார்கள் வந்தது.
குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் அந்த ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பாக 9000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தனிமையில் இருக்கும் ஆண்கள், இணையத்தில் மூழ்கி வருவதால், அவர்களை ஈர்க்கும் வகையில், வெய்போ ஆப்பில் நிர்வாண அரட்டை என்று, சிலர் பணத்திற்காக மிகவும் ஆபாசமாக நடந்து கொள்வது தெரிய வந்தது.
இதை வைத்து பணம் பண்ண நினைத்த ஆண்கள் நிர்வாண வீடியோ அரட்டையில், ஒரு பெண் போன்ற முகமூடி அணிந்து கொண்டு, புரோஸ்டெடிக் மார்பகங்களை(போலி மார்பகங்களை) அணிந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தற்போது வரை 10 தனித்தனி பிளாக் மெயில் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி இணையதளம் மூலம் இந்த கும்பல்கள் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமாகப் பணத்தை மிரட்டி வாங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் பலர் இவர்களிடம் ஏமாந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என நினைத்து காவல்துறையிடம் புகார் கொடுக்காமல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இதுபோன்ற நிர்வாண அரட்டைகளில் ஈடுபடத் தூண்டும் செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும், அதன்மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் கூட திருடப்பட்ட வாய்ப்புள்ளது என போலீசார் எச்சரித்துள்ளார்கள்.