நாம 'அவங்கள' தனியா எதிர்த்தா 'சீன்' ஆயிடும்...! 'எல்லா நாடும் ஒண்ணுக்கூடி எதிர்க்குறது தான் பெஸ்ட்...' - ஆஸ்திரலியா முன்னாள் பிரதமர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்நாம் அனைவரும் அனுபவிக்கும் இந்த துன்பங்களுக்கு காரணம் ஒரே ஒரு நாடு தான் அதனை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என ஆஸ்திரேலியா நாடு அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்கா போராடியது போல அதிகமாக வற்புறுத்தியது ஆஸ்திரேலியா. அன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரட் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேசும் போது, 'சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும். நாம் தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால், சீனா அந்நாட்டை சுலபமாக தண்டித்து விடும்.
உலக நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருந்தால், தனியாக எதிர்ப்பதை காட்டிலும் பிற நாடுகளுடன் இணைந்து சீனாவை எதிர்ப்பதே சிறந்தது. அப்போதுதான் சீனா அந்த நாட்டுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை செயல்படுத்த
இயலாது'
உலகளவில் கொரோனா வைரஸ் பரவ காரணம் சீனா என்ற நாடு. கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்படும் போதே அதை தடுத்திருந்தால் உலக நாட்டு மக்கள் தற்போது படும் துன்பங்களை அடைந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்க தயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
