'இன்னும் டிக்கெட் போடல'... 'இங்கிலாந்தில் இருக்க போகும் வீரர்கள்'... இதுதான் காரணம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 12, 2019 01:21 PM

அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், சில இந்திய வீரர்கள் இறுதி போட்டி முடியும் வரை இங்கிலாந்தில் தங்கி இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Team India stranded in England till WC final on July 14

நடப்பு உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் வெற்றி வாகை சூடிவந்த இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மான்செஸ்டரில் இந்திய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை வீரர்கள் காலி செய்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் நாடு திரும்ப விமான டிக்கெட் உடனடியாக எடுக்கப்படவில்லை. சில இந்திய வீரர்கள் மட்டும் இறுதிபோட்டி வரை இங்கிலாந்திலேயே தங்க முடிவு செய்துள்ளனர். சில வீரர்கள் மட்டும் இந்தியா திரும்புவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.