"நான் ஆணாக மாறனும்".. இளம்பெண்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம்.. இளம்பெண் சொன்னதைக்கேட்டு திகைச்சுப்போன டாக்டர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் காதலித்த தோழியை கரம்பிடிக்க, ஆணாக மாற சிகிச்சை பெற்றுவருகிறார் இளம்பெண் ஒருவர். இது இந்தியா முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காதலுக்கு தடைகள் போடுவது அத்தனை எளிதல்ல. இத்தனை ஆண்டுகால மனித வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் காலம் உணர்த்தும் பாடம் அதுவாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், இதற்கு சமீப சாட்சியாக மாறியிருக்கிறார்கள் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள். ஒருபால் காதலர்களை உலகின் பல நாடுகளும் அங்கீகரிக்க துவங்கிவிட்டன. அந்த வகையில், உத்திர பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
காதல்
உத்திர பிரதேச மாநிலத்தின் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த இரு பெண்கள் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில், இருவருக்குள்ளும் காதல் அரும்பியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவந்த இரு பெண்கள் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு எடுத்திருக்கின்றனர். இதனிடையே இந்த காதல் விஷயம் இரு பெண்களின் வீட்டிற்கும் தெரியவந்திருக்கிறது. இரு இளம் பெண்களின் குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இளம்பெண்கள் கலங்கிப்போயினர்.
ஆணாக மாற வேண்டும்
தோழியை பிரிய மனமில்லாமல் தவித்த இளம்பெண் எப்படியாவது தனது காதலியை கரம்பிடிக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறார். இந்நிலையில், ஆணாக மாறிவிட்டால் முறைப்படி காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளலலாம் என முடிவெடுத்திருக்கிறார் அந்த பெண். இதனையடுத்து பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண் தனது சிக்கலை கூறி, தான் ஆணாக வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதனையடுத்து மருத்துவர் குழு, பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இந்த சிகிச்சை முடிவடைய 1.5 ஆண்டுகள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய டாக்டர் மோஹித் ஜெயின், "பெண்ணுக்கு டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை அளிக்கப்படும். டெஸ்டோஸ்டிரோன் தெரபி மார்பு முடியின் வளர்ச்சியைத் தூண்டும். இதுபோன்ற அறுவை சிகிச்சை நடத்தப்படுவது இதுவே முதல் முறை, சுமார் 18 மாதங்களில் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் முழு உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்டது, அவர் நன்றாக இருக்கிறார்" என்றார்.
உத்திர பிரதேசத்தில் காதலித்த தோழியை கரம்பிடிக்க, இளம்பெண் ஒருவர் ஆணாக மாற சிகிச்சை பெற்றுவருவது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மற்ற செய்திகள்
