நம்பர் 1 WANTED கிரிமினல்.. பிடிச்சுக்கொடுத்தா 50 ஆயிரம் பணம்.. 13 வருஷமா தேடப்பட்ட தம்பதி.. லாஸ்ட்ல போலீஸ் விரிச்ச வலையில் வசமாக சிக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒன்று 13.5 வருடங்களுக்கு பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Also Read | "Road ஓரத்துல தான் தங்குறேன்".. தலைமறைவான கணவன்.. ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்த கர்ப்பிணி பெண்..!
ஹரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியை சேர்ந்தவர் வினோத் மிட்டல். இவர் பைனான்ஸ் செய்து வந்திருக்கிறார். அருகில் உள்ள சலூனில் சிகை திருத்தம் செய்துகொள்ள செல்லும்போது அந்த கடையை நடத்திவந்த ராஜு என்பவருடன் மிட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜு, தொழிலை விரிவுபடுத்த மிட்டலிடம் பணம் கேட்டிருக்கிறார். இதனை நம்பிய மிட்டலும் கணிசமான தொகையை ராஜுவிற்கு கொடுத்திருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு மிட்டல் தனது பணத்தை திரும்ப கேட்க, ராஜு பல காரணங்களை கூறி காலம் தாழ்த்தியதாக சொல்லப்படுகிறது.
தலைமறைவு
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, ராஜு நடத்திவந்த சலூனுக்கு தனது மகனுடன் சென்றிருக்கிறார் மிட்டல். அப்போது சலூனில் ராஜுவின் நண்பர்களும் இருந்திருக்கிறார்கள். மிட்டல் தனது பணத்தை கேட்க, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராஜு கடுமையாக தாக்கியதில் மிட்டல் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். மேலும், அவரது மகனையும் கொலை செய்திருக்கிறார் ராஜு.
இதனையடுத்து, ராஜு, அவருடைய மனைவி ஷில்பா இந்த தம்பதியுடைய மகள் நேரடியாக ஷீரடி சென்றுள்ளனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சலூனில் இருந்த ராஜுவின் நண்பர்களை கைது செய்தனர் இருப்பினும் ராஜு மற்றும் அவரது மனைவியை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாநிலத்தின் நம்பர் 1 தேடப்படும் குற்றவாளியாக ராஜூவையும் அவரது மனைவி ஷில்பாவை 2 வது குற்றவாளியாகவும் ஹரியானா மாநில காவல்துறை அறிவித்தது. மேலும், இந்த தம்பதியை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 50,000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
புது ஊர்
இதனிடையே ஷீரடியில் சில காலம் பஞ்சர் கடை நடத்திவந்த ராஜு கொஞ்ச நாளில் ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார். தான் போகும் இடங்களில் எல்லாம் தங்களது பெயர்களையும் மாற்றியிருக்கிறது இந்த தம்பதி. மேலும், போலி ஆதார் கார்டுகளையும் இந்த தம்பதி வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடைசியாக இந்தூருக்கு குடிபெயர்ந்த மிட்டலின் குடும்பம் அங்கு 450 சதுர அடியில் சொந்தமாக இடம் வாங்கி அதில் சலூனை துவங்கியிருக்கிறார்கள்.
காவல்துறை விரித்த வலை
இந்நிலையில், தொடர்ந்து இந்த தம்பதியை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த காவல்துறையினர் இந்தூரில் ராஜு இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். வாடிக்கையாளர் போல சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ராஜுவின் கடைக்கு சென்று அவரை பற்றி விசாரித்திருக்கிறார் அவர் ராஜு தான் என்பது உறுதியானவுடன், சலூனை சுற்றிவளைத்திருக்கிறது போலீஸ் படை. இதனால் ராஜு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 302, 365, 216, 120-பி பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கில் 13.5 வருடங்களாக காவல்துறையால் தேடப்பட்டுவந்த தம்பதி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம்.. 2 ஆசிரியர்களை கைது செய்த காவல்துறை.. முழு விபரம்..!