பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய், மகன்.. கொலையாளியை பிடிக்க.. மோப்ப நாய் கொடுத்த 'CLUE'.. சிக்கியது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்.
இவர் கிராமிய நாடகத்தில் கலைஞராக இருந்து வரும் நிலையில், இரண்டாவது மனைவி கமலா மற்றும் அவரது மகன் குரு ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த போது, உள்ளே இருந்து புகை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், வீட்டின் கதவும் வெளிப்புறமாக பூட்டப்பட்டு கிடந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் இது பற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்குள் வந்த பெட்ரோல் வாசனை
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கே செந்தாமரையின் இரண்டாவது மனைவி கமலா மற்றும் அவரது மகன் குரு ஆகியோர், உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். அதே போல, வீட்டிற்குள் இருந்து பெட்ரோல் வாசனையும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இருவரின் உடல்களையும் மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே, செந்தாமரை மற்றும் அவரின் மூன்றாவது மனைவியான சத்யா என்பவருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
போலீசார் தரப்பில் இருந்து வந்த மோப்ப நாய், செந்தாமரை வீட்டின் ஜன்னல் பக்கம் மோப்பம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து நேராக சத்யா வீட்டிற்கு சென்று, அங்கிருந்த ராமதாஸ் என்பவர் வேட்டியை கவ்விப் பிடித்ததாக கூறப்படுகிறது.
ஆத்திரத்தில் இருந்த செந்தாமரை
பின்னர் அவர்களிடம் நடந்த விசாரணையில், செந்தாமரையின் மூன்றாவது மனைவியான சத்யாவுக்கு, ராமதாஸ் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த செந்தாமரை கண்ணன், சத்யா மற்றும் ராமதாஸை கண்டிக்கவும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, செந்தாமரையிடம் இருந்து சொத்து பங்கினை வாங்கி வரும் படி, சத்யாவிடம் ராமதாஸ் கூற, செந்தாமரை இன்னும் ஆத்திரம் அடைந்துள்ளார். மேலும், ராமதாஸ் பைக்கையும் அவர் தீயிட்டு கொழுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
குடும்பத்தினர் போட்ட திட்டம்
இதன் காரணமாக, செந்தாமரையை கொலை செய்ய, சத்யா, ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனை செயல்படுத்துவதற்காக, செந்தாமரை வீட்டிற்கு இரவு நேரம் வந்த ராமதாஸ், அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக கருதி, வீட்டை வெளியே இருந்து பூட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி, வீட்டிற்கும் ராமதாஸ் தீ வைத்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ், அவரது தந்தை மற்றும் தாய், சத்யா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.