அமேசான் மழைக்காட்டிற்குள் காட்டிற்குள் தொலைந்துபோன வாலிபர் 31 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு.. திகில் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 03, 2023 04:39 PM

அமேசான் மழைக் காட்டிற்குள் தொலைந்து போன வாலிபர் ஒருவர் 31 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

Bolivian Man who lost in Amazon Rainforest rescued after 31 days

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விமானம் போலவே கனவு வீட்டை கட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ.!

அமேசான் காடு

தென்னமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அமேசான் வெப்பமண்டல மழைக் காடுகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. பிரேசில் நாட்டின் பெருமையான்மையான பகுதியில் இந்த காடுகள் பரவியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கொலம்பியா, பெரு, பொலிவியா உள்ளிட்ட பல தென்னமெரிக்க நாடுகளிலும் இந்த காடுகள் பரவி இருக்கின்றன. ஏராளமான விலங்குகளும் அடர்ந்த மரங்களையும் கொண்ட இந்தக் காடுகளை பாதுகாக்க அந்நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

பயணம்

இதனிடையே இந்த காடுகளுக்குள் வேட்டையாட சொல்பவர்கள் சில சமயங்களில் வழி தடுமாறி காட்டிற்குள்ளேயே சிக்கிக் கொள்வதுண்டு. அப்படியான சம்பவம் சமீபத்தில் மீண்டும் நடந்திருக்கிறது. பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஜொனாதன் அக்கோஸ்டா என்னும் நபர் தனது நான்கு நண்பர்களுடன் அமேசான் மழைக் காடுகளுக்கு வேட்டைக்காக சென்று இருக்கிறார். அப்போது கடந்த ஜனவரி 25ஆம் தேதி அவர் காணாமல் போய் இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை தேட துவங்கியுள்ளனர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

Bolivian Man who lost in Amazon Rainforest rescued after 31 days

Images are subject to © copyright to their respective owners.

காட்டிற்குள் கேட்ட குரல்

இதனையடுத்து உள்ளூர் போலீசார் அவரை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர். தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருந்தனர். இப்படியான சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமை காட்டுக்குள் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, 'காப்பாற்றுங்கள்' என குரல் கேட்டிருக்கிறது. இதனால் சுறுசுறுப்படைந்த அதிகாரிகள் குரல் வந்த திசையை நோக்கி ஓடியுள்ளனர்.

Bolivian Man who lost in Amazon Rainforest rescued after 31 days

Images are subject to © copyright to their respective owners.

அனுபவம்

அங்கே இருப்பது ஜொனாதன் தான் என்பதை அறிந்த அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய அனுபவம் குறித்து பேசியுள்ள ஜொனாதன்,"மக்கள் இருக்கும் இடங்களை தேடி பல கிலோமீட்டர் பயணம் செய்தேன். ஆனால், காட்டை நான் சுற்றிவருவது போல தோன்றியது. பாதையை அடையாளம் காண முடியவில்லை. இரவுகளில் சிறுத்தை, காட்டுப்பற்றி உள்ளிட்ட விலங்குகளை சமாளிக்க வேண்டியிருந்தது. நல்லவேளை எனக்கு வேட்டையாடுதல் பற்றி தெரியும் என்பதால் தப்பித்தேன். மழை பெய்யாத நாட்களில் எனது சிறுநீரை அருந்தியும், பூச்சிகளை உணவாகவும் எடுத்துக்கொண்டேன். சில மரங்களின் வேர்களையும் சாப்பிட்டேன். இப்போதுதான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இனி வேட்டையாட ஒருபோதும் செல்லமாட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Bolivian Man who lost in Amazon Rainforest rescued after 31 days

Images are subject to © copyright to their respective owners.

அமேசான் காட்டில் தொலைந்த ஜோனாதன் 17 கிலோ எடை குறைந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். அவருடைய கணுக்கால் எலும்பு விலகி இருப்பதாகவும் ஆனால், அவர் இன்னும் சில தினங்களில் குணமாகிவிடுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பல்லக்கில் இருந்து திருடப்பட்ட வெள்ளி தகடுகள்.. ஒருவர் கைது..!

Tags : #BOLIVIAN MAN #AMAZON RAINFOREST #RESCUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bolivian Man who lost in Amazon Rainforest rescued after 31 days | World News.