பட்டமளிப்பு மேடையில் ரஞ்சிதமே ஸ்டைலில் FLYING KISS கொடுத்த மாணவர்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 03, 2023 03:26 PM

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சமூக வலைத்தளங்களில் நிறைய நேரம் உலவிடுவதை நாம் கவனித்திருப்போம். அப்படி நேரத்தை நாம் செலவிடும் போது இந்த உலகில் என்ன நடந்தாலும் அதை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Student ranjithame style flying kiss in graduation speech

Also Read | கோர்ட்டுக்கு போற வழியில.. தப்பித்து போன நபர்.. மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைந்த வினோத சம்பவம்!!

அதே போல, இந்த உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் அவை வீடியோக்களாகவோ,  செய்திகளாகவோ நிச்சயம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படவும் செய்யும்.

அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க வீடியோக்கள் வைரலாகி இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறும். இயல்பாக நடைபெறும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் போது அவை வைரலாகி இணையவாசிகள் மத்தியில் கவனம் பெறவும் செய்யும்.

அப்படி வைரல் ஆகும் விஷயங்கள், விநோதமாகவோ, அதிர்ச்சி கலந்தோ, வேடிக்கையாகவோ அல்லது எமோஷனல் கலந்தபடி என வகை வகையாக இருக்கும். இந்த நிலையில் தற்போதும் அப்படி ஒரு வீடியோ குறித்த செய்தி தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து பலரது லைக்குகளை பெற்று வருகிறது.

Student ranjithame style flying kiss in graduation speech

பட்டமளிப்பு விழா மேடையில் செய்த விஷயம்

பொதுவாக, கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் போது மேடையில் இருக்கும் பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசுவார்கள். இதனைத் தொடர்ந்து பட்டம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மாணவர்களாக வரிசையாக சென்று டிகிரியை வாங்கி கொண்டு கடந்து செல்வார்கள்.

ஆனால், பட்டம் வாங்க வந்து மேடை ஏறிய மாணவன் ஒருவன் வித்தியாசமாக செய்த விஷயம் தான் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேடைக்கு வந்த கல்லூரி மாணவர் ஒருவர், சிறப்பு விருந்தினர் கையில் இருந்து சான்றிதழ் வாங்கி கொண்டதாக தெரிகிறது. வழக்கம் போல சான்றிதழ் வாங்கியதும் கடந்து செல்லாமல், வாங்கிய கையோடு ரஞ்சிதமே விஜய் ஸ்டைலில் Flying kiss ஒன்றையும் கொடுக்கிறார்.

Student ranjithame style flying kiss in graduation speech

ரஞ்சிதமே Flying Kiss

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வாரிசு திரைப்படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலில் வித்தியாசமாக Flying kiss ஒன்றை ஸ்டைலாக கொடுத்திருப்பார் விஜய். அதனை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின் போதும் கூட விஜய் செய்திருந்தார். ஸ்டைலாக இருக்கும் இந்த Flying Kiss ஆக்ஷன் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்த நிலையில், தற்போது பட்டமளிப்பு விழாவிலும் மாணவர் தனது சான்றிதழை வாங்கியதும் ரஞ்சிதமே விஜய் ஸ்டைலில் Flying kiss ஒன்றை அரங்கை நோக்கி விட்டிருந்தார். இதனை பார்த்ததும் மேடையில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் மாணவர் என்ன செய்தார் என குழப்பத்துடன் பார்க்கவும் செய்கின்றனர்.

பட்டமளிப்பு விழா மேடையில் மாணவரின் ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ் கொடுத்த வீடியோ தான், இணையத்தில் அதிக ரவுண்டு வந்த வண்ணம் உள்ளது.

Also Read | "டிப்ஸ் கிடைக்குமான்னு ஜடேஜாகிட்ட கேட்டேன், அப்ப அவர் சொன்ன பதில்".. மனம்திறந்த ஆஸ்திரேலிய வீரர்!!

Tags : #STUDENT #RANJITHAME STYLE FLYING KISS #STUDENT RANJITHAME STYLE FLYING KISS #GRADUATION SPEECH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Student ranjithame style flying kiss in graduation speech | Tamil Nadu News.