'100 மில்லியன் தொழிலாளர்கள் கதி அவ்வளவு தானா'?.. அதிபர் பைடன் முடிவால்... அமெரிக்காவில் பதற்றம்!.. பீதியை கிளப்பும் புதிய விதிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பைடன் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பால் சுமார் 100 மில்லியன் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அவ்வாறு செய்யவில்லை என்றால், வாரந்தோறும் கொரோனா சோதனை மேற்கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்கவும், மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் கடுமையான அபராதம் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னதாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறிய தகவலில், 2.5 மில்லியன் பெடரல் ஊழியர்களுக்கும் மற்ற வெளி ஒப்பந்தக்காரர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் பைடன் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதன்படி நிர்வாக உத்தரவை ஒவ்வொரு முறை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு தலா 14,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, சுமார் 80 மில்லியன் அமெரிக்க மக்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஆனால், 177 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள போதும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
அது மட்டுமின்றி, இந்தியாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடானது, அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவே கூறப்படுகின்றது.
இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்புசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக பைடன் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
