ஊசியே இல்லாத கொரோனா தடுப்பூசி!.. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது!.. டபுள் ஓகே சொன்ன மத்திய அரசு!.. அப்படி என்ன ஸ்பெஷல்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Aug 20, 2021 10:23 PM

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளிலேயே மிகவும் மாறுபட்ட, தனித்தன்மைமிக்க ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

zydus cadila needle free zycovd emergency approval vaccine

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைடஸ் கெடிலா (Zydus Cadila) என்ற நிறுவனம், ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர். ஆகியவற்றுடன் இணைந்து இது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி, இந்தியாவில் கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசி ஆகும். அதேநேரம், இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 6வது கொரோனா தடுப்பூசி. முன்னதாக கோவாக்சின், கோவிஷீல்டு, மாடர்னா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் & ஜான்சன் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

இந்த 'ஜைகோவ்-டி'யின் சிறப்பம்சம் என்னவெனில், பெயரில் மட்டுமே இதில் ஊசி என்பது இருக்கும். புதிய டெக்னாலஜியின் மூலம் ஊசியின்றி, சதையின் சிறிய துளைக்குள் செல்லும்படியான எளிமையான ஒரு மருந்து செலுத்தும் கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

             

இதை செலுத்திக்கொள்ள நினைப்பவர்கள் 28 நாட்கள் இடைவெளியில், 3 டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 12 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி நல்ல பலனை தரும் என கூறியிருக்கும் இதன் தயாரிப்பாளர்கள், விரைவில் அதற்கான ஒப்புதலையும் பெற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஜைகோவ்-டி, உலகளவில் டி.என்.ஏ. தொழில்நுட்பத்தில் உருவான முதல் தடுப்பு மருந்து ஆகும். டி.என்.ஏ. தொழில்நுட்பம் என்பது, மரபுப்பொருளில் (Plasmid) கொரோனா வைரஸின் வெளிப்புறத்திலுள்ள முள்போன்ற அமைப்புள்ள ஸ்பைக் புரதம் கோடிங் செய்யப்பட்டு, அதனை உடலுக்குள் செலுத்துவது.

இப்படியாக உடலுக்குள் செலுத்தும்போது, அந்த ஸ்பைக் புரதம் முள்போன்ற அமைப்பை உருவாக்கும். இதை நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு, அதற்கு எதிரான ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும். அப்படி கொரோனாவுக்கு எதிரான சக்தியை அந்நபர் பெறுவார். இது டெல்டா கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி வரை தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பூசி தட்டுப்பாடு பெருமளவில் குறையும் எனவும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Zydus cadila needle free zycovd emergency approval vaccine | India News.